திருப்பூரில் 4 வயது சிறுவன் உட்பட7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு : மருத்துவர்கள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பூரில் 4 வயது சிறுவன் உட்பட 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் சின்னாண்டிபாளையத்தை சேர்ந்த 25 வயது ஆண், திருப்பூர் வாவிபாளையம் சம்பத் தோட்டத்தை சேர்ந்த 55வயது பெண், திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த 18 வயது ஆண், திருப்பூர் காங்கயம் சாலை புதுக்காடு பிரிவை சேர்ந்த 4 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 30 வயது ஆண், கொடுவாய் லட்சுமி நகரை சேர்ந்த 55 வயது பெண் மற்றும் 20 வயது ஆண் உட்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் நேற்று உறுதி செய்யப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறும்போது, ‘‘வீட்டைச்சுற்றி தூய்மையாக வைத்துக்கொண்டாலே கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகாது.

குழந்தைகளுக்கு கை, கால் முழுவதும் தெரியாத படி, ஆடைகளை அணிவித்தால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.அதேபோல் வீட்டில் வாரக்கணக்கில் தண்ணீர் பிடித்து வைத்துள்ளகிடைமட்ட தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிர்ப்பாற்றலை உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை உணவில் அதிகளவில் பெற்றோர்எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில், சுகாதாரத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்