நாமக்கல்லில் 6-ம் தேதி பொம்மை தயாரிப்பு பயிற்சி :

நாமக்கல்லில் வரும் 6-ம் தேதி பொம்மை தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் தொடங்குகிறது, என இந்தியன் வங்கி பயிற்சி நிறுவன இயக்குநர் பிருந்தா தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு பொம்மை தயாரித்தல் இலவச பயிற்சி முகாம் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது.

பயிற்சி முகாம் 13 வேலை நாட்களுக்கு நடைபெறுகிறது. இப்பயிற்சிக்கு 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப் பதாரர் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், பயிற்சி பொருட்கள், தேநீர், சிற்றுண்டி, உணவு என அனைத்தும் இலவசமாக வழங் கப்படும். விண்ணப்பங்களை இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ரவின்பிளாசா, திருச்சி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில், நாமக்கல் என்ற முகவரிக்கு நாளைக்குள் (4-ம் தேதி) நேரில் வந்து பூர்த்தி செய்து தரவேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்