திருவேகம்பத்தூர் அருகே விரிசுழியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் உடையாகுளம் கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் அருகே உடையாகுளம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தை மூன்று பக்கங்களிலும் கண்மாய்கள் சூழ்ந்துள்ளன. ஒரு பக்கத்தில் விரிசுழியாறு செல்கிறது. இக்கிராம மக்கள் விரிசுழியாற்றை கடந்துதான் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள திருவேகம்பத்தூருக்கு செல்ல முடியும். கிராம மக்கள் பங்களிப்புடன் தனியார் மூலம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போதும் அக்கிராமம் தனித்தீவானது. தற்போதும் அதேபோல் உடையாகுளம் கிராமம் 16 ஆண்டுகளுக்கு பின் வெள்ள பாதிப்பால் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அக்கிராமத்தைச் சுற்றியுள்ள கண்மாய்கள் நிரம்பிய நிலையில், விரிசுழியாற்றிலும் வெள்ளம் செல்கிறது. இதனால் கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்களுக்கு உயர்மட்ட பாலம் கட்டித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago