திருச்சி- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் சோழன் விரைவு ரயில் டிச.8-ம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி- சென்னை எழும்பூர் இடையே தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வரும் சோழன் விரைவு ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றவும், அதன் வேகத்தை அதிகரிக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, டிச.8-ம் தேதி முதல் சோழன் விரைவு ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்பட உள்ளது. இதன் காரணமாக, இந்த வண்டியின் எண்கள் சென்னை எழும்பூர்- திருச்சி இடையே 22675 என்றும், திருச்சி- சென்னை எழும்பூர் இடையே 22676 என்றும் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு திருச்சியை பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடையும். எதிர் வழித்தடத்தில் திருச்சியிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு, சென்னை எழும்பூரை மாலை 5.30 மணிக்குச் சென்றடையும். ஏற்கெனவே, இந்த ரயில் நின்று சென்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago