இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் - தூத்துக்குடியில் படகில் சென்று வீடு, வீடாக மருந்துகள் விநியோகம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் மழை, வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் படகில் சென்று மருந்துகள் வழங்கினர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கடந்த 25-ம் தேதி பெய்த கன மழையால் ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதிகளில் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

முகாமுக்கு வந்த குழுவினரும், இல்லம் தேடி மருத்துவம் திட்டக் குழுவினரும் படகு மூலம் வீடு, வீடாகச் சென்று மருந்துகளை வழங்கினர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மருந்து, மாத்திரைகள் 10 வீடுகளில் வழங்கப்பட்டன. மேலும், நோய் பரவலை தடுக்கும் வகையில் களிம்புகள் மற்றும் பிளீச்சிங் பவுடரையும் விநியோகித்தனர். சுமார் 100 வீடுகளில் நோய் தடுப்பு மருந்துகளை கொடுத்தனர். இதுபோல் தினமும் ஒவ்வொரு பகுதியாக சுகாதாரப் பணி நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்