பேருந்துகளில் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களை கண்காணிக்க 3 குழுக்கள் :

By செய்திப்பிரிவு

வேலூர் அருகேயுள்ள பெருமுகைபகுதியில் இரு தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்து விபத்துக் குள்ளானதில் தனியார் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பள்ளி, கல்லூரி நேரங்களில் பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற் றது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமை யாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், மாவட்ட ஆட்சியர் பேசும்போது, ‘‘படியில் பயணம் செய்வது ஆபத்தானது என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதையும் மீறி தொடர்ந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை காவல் துறை, வட்டார போக்குவரத்து மற்றும் கல்வித்துறை அடங்கிய 3 குழுக்கள் கண்காணிக்க வேண்டும். படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர் களின் புகைப்படங்களை அவர்களின் பெற்றோருக்கும் பள்ளி, கல்லூரிக்கும் அனுப்ப வேண்டும்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்