உதகையில் நாளை (டிச.3) முதல்வரும் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு குறும்பட விழா நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக இத்திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் மாதவன் பிள்ளை, ராதா கிருஷ்ணன், ரங்கராஜன் ஆகியோர், உதகையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நீலகிரி பிலிம் கிளப், பிசி டிவி நெட்வொர்க் ஆகிய அமைப்புகள் சார்பில் உதகை அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் குறும்பட விழா நடத்தப்படுகிறது. நீலகிரி பிலிம் கிளப்பால் 2016-ம்ஆண்டு நிறுவப்பட்ட லாப நோக்க மற்ற தன்னாட்சி அமைப்புதான் உதகை ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்.
இவ்விழாவில், திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பங்கேற்று, சிறந்த படங்களைத் தேர்வு செய்கிறார். மூன்று நாட்களில் 32 நாடுகளில் இருந்து 119 குறும்படங்கள் திரையிடப்படும். விழா நிறைவு நாளில் சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகருக்கான யானை விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டில் உள்ளூர் திறமைகளை ஆதரிக்க, ஜான் சலீவன் பெயரில் புதிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விருது நீலகிரியில் கலைமற்றும் கலாசாரத்தின் முன்னேற்றத்துக்கு பங்களித்தவர்கள் மற்றும்உள்ளூர் திரைப்பட கலைஞர்களுக்கானது. இந்த விழாவில், முதன்முறையாக தோடர் பழங்குடியினத்தவரின் குறும்படமும்திரையிடப்படவுள்ளது. பட விழாவில் திரையிடப்படும் படங்களை, பார்வையாளர்கள் இலவசமாக காணலாம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago