மத்திய அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் 36-வது தேசிய புத்தகக் கண்காட்சி, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே நவம்பர் 30-ம் தேதி தொடங்கியது.
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சுயநிதிப் பள்ளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்எம்.நாராயணமூர்த்தி வரவேற்றார்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கோவை மண்டல மேலாளர் ஆர். ரங்கராஜன், மேலாளர் எஸ்.குணசேகர், எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், துருவன் பாலா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் 2022-ம் ஆண்டு ஜன. 15-ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நாள்தோறும் நடைபெறும் எனவும், வாசகர்களுக்கு 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago