அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சர்வதேச வணிகம் பாடப்பிரிவு சார்பில், ‘நல் வாணிபம் செய்வோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெ. நளதம் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை மாணவர் ஆனந்த் அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சக்திவேல் பங்கேற்று, வணிகம் செய்வது தொடர்பாக மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘ஒரு நிறுவனத்தை தொடங்குதல், அதற்கான மூலதனம், பணியாட்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை திரட்டுவது மிகவும் முக்கியம். தொழில் செய்கையில் ஏற்படும் சிக்கல்கள், தொழில் செய்ய வங்கியில் கடன் பெறுதல், அரசின் உதவியை நாடுதல் ஆகியவை தொழிலில் சிறப்பு பங்கு வகிக்கிறது. பெண்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்’’ என்றார். கல்லூரியின் சர்வதேச வணிகத்துறை தலைவர் பாலமுருகன் கருத்தரங்கை ஒருங்கிணைத்தார். மாணவி ஜீவா நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago