திருப்பூர் மங்கலத்தை அடுத்துள்ளசுல்தான்பேட்டை வெங்கடேஸ்வராநகரில் வசிக்கும் 12 வயது சிறுவனுக்கு கடந்த 10-ம் தேதிடெங்கு காய்ச்சல் ஏற்பட்டது.கோவையில் உள்ள தனியார்மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதையடுத்து வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சுகாதாரப் பணிகள்துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், பெருமாநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் நித்யா முருகேசன், மருத்துவர் சங்கவி, மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் சேகர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டு, கொசுமருந்து தெளிக்கப்பட்டது. மழைநீர் தேங்காதபடி சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் டிரம்கள், தேங்காய் சிரட்டைகள், தொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி, காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
மேலும் 9 பேருக்கு டெங்கு
திருப்பூர் மாவட்டத்தில் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி மாணவி உட்பட 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், திருப்பூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago