சிறுசேமிப்பினை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டது.
உலக சிக்கன தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே சிக்கனம் மற்றும் சிறு சேமிப்பினை வலியுறுத்தி ஒன்றிய அளவிலான போட்டிகள் நடந்தப்பட்டன. இதில், கல்வி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்று வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்க்கும் பொருட்டு, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, விநாடி-வினா, பேச்சுப் போட்டி, விழிப்புணர்வு சொற்றொடர் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை மாவட்ட சேமிப்பு அலுவலர் வேடியப்பன், மாவட்ட சேமிப்பு உதவி அலுவலர் ரெஸினா மற்றும் நாராயணராவ் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர்.
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், 80 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசும், கேடயமும் ஆட்சியர் அலுவல கத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago