பண்ருட்டியில் வாடகை பாக்கி நிலுவையில் உள்ள நகராட்சி கடைகள் சீல் வைக்கப்பட்டன.
பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகை செலுத்தப்படாமல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தடை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மண்டல இயக்குநரின் உத்தரவின் படி பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் ரவி, பொறியாளர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர வாடகை வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்த10-க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago