ஓசூரில் ஊழியரிடம் நூதன முறையில் பணம் மோசடி :

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் சுகில்அகமது (42). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டிலுள்ள பிரிட்ஜ், மரச்சாமான்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனியார் செயலி மூலம் விவரங்களை பதிவு செய்தார். கடந்த 20-ம் தேதி சுகில்அகமதை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், அவரிடமுள்ள வீட்டு பழைய பொருட்களை வாங்கிக் கொள்வதாகவும், வாட்ஸ் அப்பில் க்யூஆர் கோடு அனுப்புகிறேன், அதனை ஸ்கேன் செய்தால் உங்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்திவிடுவதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய சுகில்அகமது, க்யூஆர் கோட்டை ஸ்கேன் செய்தார். சிறிது நேரத்தில் சுகில்அகமது வங்கி கணக்கில் இருந்து ரூ.96 ஆயிரத்து 666 பணம் எடுக்கப்பட்டது.

இதில் அதிர்ச்சி யடைந்தவர், மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுகில்அகமது, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்