கிருஷ்ணகிரியில் இன்று ஒட்டுமொத்த துப்பரவு பணிகள் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (2-ம் தேதி) ஒட்டுமொத்த துப்பரவு பணி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை, டெங்கு மற்றும் பிற பூச்சிகள், விலங்குகள் மற்றும் நீரினால் பரவும் நோய்கள் தடுப்பு பணி குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

வடகிழக்குப் பருவமழை காலம் என்பதால் கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, பூச்சிகளால் பரவக்கூடிய ஸ்கிரப் டைபஸ், நீரினால் பரவும் நோய்களான டைபாய்டு, வாந்திபேதி, மஞ்சள் காமாலை மற்றும் விலங்குகள் மூலம் பரவக்கூடிய நோய்களான லெப்டோஸ் பைரோசிஸ் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

அதற்கான முன்னேற்பாடு களை செய்ய அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து நட வடிக்கை எடுக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் மேற்கூறிய நோய்கள் கண்டறியப்படும் பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி இன்று (2-ம் தேதி) அனைத்து இடங்களிலும் ஒட்டுமொத்த துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை குளோரினேசன் செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்