கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று 1443 கனஅடியாக நீர்வரத்து இருந்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி பகுதியில் மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் குளிர்ந்த சீதோஷணநிலை காணப்பட்டது. பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழை அளவு (மில்லி மீட்டரில்), ஊத்தங்கரை 7.6, நெடுங்கல் 5, பாரூர் 3, தேன்கனிக்கோட்டை, ஓசூர் 2.20, கிருஷ்ணகிரி 1.40, சூளகிரி, ராயக்கோட்டை 1 மி.மீ மழை பதிவானது.
மேலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 1443 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வலது மற்றும் இடபுறக் கால்வாய்கள், தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 1589 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் 50.60 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதேபோல் பாரூர் பெரிய ஏரிக்கு விநாடிக்கு 14 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் 15.60 அடிக்கு தண்ணீர் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago