நெல் பயிரை காக்கும் முறைகள் : வேளாண் துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான சாகுபடியில் 2,100 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 400 முதல் 500 ஹெக்டேர் பரப்பளவுக்கு நாற்றங்கால் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும்தட்பவெப்ப சூழ்நிலை மற்றும்அதிகப்படியான மழைப்பொழிவினால் நெல் பயிரானது ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு இலக்காகும் நிலை உள்ளது.

அதை நிவா்த்தி செய்ய தகுந்தவடிகால் வசதி ஏற்படுத்தி, வயல்களில் தேங்கியுள்ள அதிகப்படியான மழை நீரை வடித்து வேர்பகுதிக்கு காற்றோட்ட வசதியைஏற்படுத்த வேண்டும். அண்மையில் நடவு செய்யப்பட்ட இளம்பயிர் அதிகப்படியான மழைநீர் மற்றும் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டிருந்தால் நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுகளை நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் அல்லது நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

மழைநீரில் மூழ்கிய நெல் பயிர்கள் பூச்சி மற்றும் நோய்களுக்கு எளிதில் இலக்காகும் நிலை உள்ளது. எனவே, அதிகப்படியான அளவு தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட யூரியாவை பிரித்து இட வேண்டும். வெள்ள நீரில் மூழ்கிய 20 முதல் 30 நாட்களுக்கான நெல் பயிர்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய, ஏக்கருக்கு அமோனியம் சல்பேட் 50 கிலோ என்ற அளவில்இடலாம் அல்லது ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக கலந்துஓர் இரவு முழுவதும் வைத்திருந்துமறுநாள் அதை வயலில் இடும்போது அதனுடன் பொட்டாஷ் 17 கிலோ கலந்து இட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்