திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இச்சங்கத்தின் 5 தொகுதிகளுக்கு 15 நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 15 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவராக நெ.ஆனந்த ராமச்சந்திரன் பிள்ளை, துணைத் தலைவராக ச.சீனிவாசன், செயலாளராக தி.ஞானசுந்தரம், துணைச் செயலாளராக ச.வெங்கடாசலம், பொருளாளராக பி.வி.பொன்முருகேசன் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் க.மெய்கண்டமுத்து பிள்ளை, ச.மா.கார்க்கி ஆகியோர் பணியாற்றினர். வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தினர் மற்றும் இளைஞர் பேரவையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago