திருப்பத்தூர் ஷெப்பர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம் விஞ்ஞானி ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ரத்னா நடராஜன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் குடியண்ணன் வரவேற்றார்.
திருப்பத்தூர் அடுத்த மாடப் பள்ளியில் உள்ள பள்ளியில் மத்திய அரசின் நிதித் துறை மூலம் வளர் இளம் விஞ்ஞானி ஆய்வகம் அமைத்துள்ளனர். இந்த நவீன ஆய்வகத்தை அணு ஆராய்ச்சி விஞ்ஞானி டேனியல் செல்லப்பா திறந்து வைத்தார்.
மத்திய அரசு ரூ.20 லட்சம் மற்றும் பள்ளியின் பங்களிப்பாக ரூ.5 லட்சம் என மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன ஆய்வகத்தை திருப்பத்தூர் மாவட்டத்திலேயே முதல் முறை யாக இந்த பள்ளியில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த விழாவில் கலந்து கொண்ட அணு ஆராய்ச்சியாளர் டேனியல் செல்லப்பாவிடம் பள்ளி மாணவர்கள் தங்களது கண்டு பிடிப்புகளை காட்டி அசத்தினர். முடிவில் லிங்குமணி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago