திருப்பூரில் 7 பேருக்கு டெங்கு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகரில் டெங்கு பாதிப்பு மெல்லமெல்ல உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் திருமுருகன்பூண்டி பெரியாயி பாளையத்தை சேர்ந்த 22 வயது ஆண், உடுமலை காந்திநகர் வி.கே.பி. நகரை சேர்ந்த 7 வயது சிறுவன், அவிநாசி சாலை அம்மாபாளையத்தை சேர்ந்த 2 வயது சிறுவன், காங்கயம் சாலை பாளையக்காட்டை சேர்ந்த 42 வயது ஆண், முக்கோணம் புளியங்காட்டை சேர்ந்த 4 வயது சிறுவன், திருப்பூர் காந்தி நகர் ஈபி நகரை சேர்ந்த 4 வயது சிறுமி, முதலிபாளையத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட 7 பேருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்தது.

இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்