கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - விவசாயிகளுக்கு ரூ.195 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.195 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடனாக தனிநபர் பிணையத்தின் பேரில் ரூ.1.60 லட்சம் வரையிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 12,668 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.70.78 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில், மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க ஆண்டுக் குறியீடாக ரூ.195 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவசாயிகள் நில உடைமை சிட்டா, அடங்கல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான போட்டோ ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி விண்ணப்பத்தை அளித்து புதிய உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயன் பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்