செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியங்களுக் குட்பட்ட ஊராட்சி மன்ற தலை வர்கள் மற்றும் ஊராட்சி செய லாளர்களுக்கான கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மஸ்தான் தலைமையில் நேற்று நடைபெற் றது. இக்கூட்டத்தில் அவர் பேசியது:
நகரப்பகுதிகளை போன்றே கிராமப்புற பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஒன்றியங்களுக்குட்பட்ட 80 சதவீதத் தினர் மட்டுமே கரோனா தடுப் பூசி செலுத்தி உள்ளனர். சிறப் பான முறையில் பணிகளை மேற்கொண்டு 100 சதவீதம் கரோனாதடுப்பூசி செலுத்தும் உள்ளாட்சி களின் பிரதிநிதிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். கரோனா தடுப்பூசி பணி மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் வீடு தேடி சென்று சேர்த்திட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago