பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்ன சரவணன் (29). பட்டப் படிப்பு படித்துள்ளார். இவரது எதிர்வீட்டுக்கு படிக்க வந்த உறவினர் வீட்டு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 06.03.2017-ல் பிரசன்ன சரவணன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதெரிந்து பெண்ணின் உறவினர்கள் திருமணம் செய்து கொள்ளுமாறு பிரசன்ன சரவணனின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அதற்கு பிரசன்ன சரவணன், அவரது தாய் அமுதா(56), தந்தை பக்கிரி(62) ஆகியோர் 30 பவுன் நகை, கார் வாங்கி தந்தால் தான் திருமணம் நடக்கும் என்று கூறினர். இதுகுறித்து அந்த பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி பாலகிருஷ்ணன் இவ்வழக்கில் நேற்று பிரசன்ன சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 1.5 லட்சம் அபராதமும், அவரது அவரது தாய் அமுதா, தந்தை பக்கிரி ஆகியோருக்கு தலா 1 வருடம் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் பிரசன்ன சரவணனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ. 1.5 லட்சத்தில் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பிரசன்ன சரவணனின் தாய், தந்தை 2 பேரும்ஜாமீனில் வந்தனர். இந்நிலையில் போலீஸார் பிரசன்ன சரவணனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக க. செல்வப்பிரியா ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago