சிவகங்கை அருகே அடைபட்ட ஆற்று தரைப்பாலம் : ஆற்றின் கரை உடைப்பால் குடியிருப்புகளும் பாதிப்பு

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே அடைபட்ட நாட்டாறுகால் ஆற்று தரைப் பாலத்தை சீரமைக்காமல் விட்டதால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நாட்டாறுகால் ஆறு சிவகங்கை அருகே ஊத்திக்குளம் கண்மாயில் தொடங்கி பெரியகண்ணனூர், சிரமம் கிராமம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை அடைந்து வங்கக் கடலில் கலக்கிறது. 6 மாதங்களுக்கு முன்பு, சாத்தரசன்கோட்டை - சூராணம் நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சிரமம் அருகே நாட்டாறுகால் ஆறு குறுக்கே செல் வதால், 3 தூம்புகள் அமைத்து தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், முறையாக அமைக்காததால் வாகனங்கள் சென்றபோது தூம்புகள் சேதமடைந்தன. இதையடுத்து சாலையை சீரமைத்துவிட்டு தூம்புகளை சரி செய்யாமல் விட்டு விட்டனர். மேலும் பாலத்துக்கு ஆற்றுநீர் செல்லாதபடி மண் கொட்டினர். இந்நிலையில் மழையால் நாட்டாறுகால் ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது. சிரமம் அருகே தரைப்பாலம் அடைபட்டுள்ளதால், தண்ணீர் சாலையில் ஓடுகிறது.மேலும் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு அருகேயுள்ள சிரமம் காலனிக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. இதனால் தரைப்பாலத்தைச் சரிசெய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்