தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் க.சுரேஷ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தியாகராஜன், மாவட்ட இணைச் செயலாளர்கள் ராஜசேகரன், ரமேஷ் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கருணை அடிப்படையில் சேர்ந்த 53 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அரசாணையின்படி, பணிவரன்முறை செய்யப்பட்டதை, மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளதை நீக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய காலத்தில் நில அளவை மற்றும் நிர்வாக பயிற்சி அளிக்க வேண்டும். பலமுறை வலியுறுத்தியும் அடங்கல் சான்று வழங்குவது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெளிவான சுற்றறிக்கை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நேற்று 400 கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago