தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் சீரான மருத்துவத்தில் தற்போதைய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் ஒருநாள் சர்வதேச கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, மருதுபாண்டியர் கல்லூரி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ், ஆய்வியல் புலத்தலைவர் ஜி.அர்சுணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர், நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மரபு அறிவியல் துறையின் இணை இயக்குநர் பி.பத்மநாபன் கலந்துகொண்டு, நுண்துகள்கள் எவ்வாறு அல்ஜிமர் நோயில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விளக்கினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உயிர் மருத்துவ அறிவியல் துறைத் தலைவர் கே.பிரேம்குமார் புற்றுநோயில் மரபுகளின் நிலையற்றத் தன்மையைப் பற்றி உரையாற்றினார். முன்னதாக, உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் இரா.ராஜகுமார் வரவேற்றார். இறுதியாக, உயிர் வேதியியல் துறைத் தலைவர் வே.ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
கருத்தரங்கில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 25 ஆய்வியல் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டனர். மேலும், கல்லூரி மேலாளர் இரா.கண்ணன், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் லி.பிரின்ஸ், உயிர் அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago