தூத்துக்குடி அருகேயுள்ள டி.குமாரகிரி, பண்டாரம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவ பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக மனு அளித்தனர்.
அந்த மனுக்கள் விவரம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுவதாக தவறான கருத்தை சிலர் பரப்பினர். அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், தூத்துக்குடி நகரம் மாசடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மை நிலை வெளிப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்பியதால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். தூத்துக்குடி மாசடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணம் இல்லை என்பது உறுதியாகியுள்ளதால், ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago