தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிக்கை: தமிழகத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிக்கு நடப்பாண்டில் (2021-2022) நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயம்10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்க கூடாது. இது தொடர்பாக சான்றிதழ் அளிக்க வேண்டும்.
சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்னரேவழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்ப படிவம்மற்றும் சான்றிதழ் www.bcmw@gov.in என்றஇணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago