கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கித்தர கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றிய சிஐடியு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். சிஐடியு அமைப்பின் மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார். கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாநில பொதுச்செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்.

கட்டுமானப் பொருட்களான சிமென்ட், கம்பி, எம்.சாண்ட் மணல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு பணி செய்யும் இடத்தில் விபத்து நேர்ந்தால் மருத்துவச் செலவை நலவாரியம் மூலம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு வழங்கும் ரூ.20 ஆயிரத்தை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முதல் வகுப்பு முதல் கல்லூரி வரை கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்