சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, கிருஷ்ணகிரியில் மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு நகரத் தலைவர்கள் லலித் ஆண்டனி, முபாரக் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரணி நேதாஜி சாலை, காந்திசாலை வழியாக சென்று தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
பேரணியில், எம்பி செல்லக்குமார் பங்கேற்றார். பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும்போது, “கடந்த ஓராண்டில் சமையல் எரிவாயு விலை ரூ.300 உயர்ந்துள்ளது. மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2014-ல் ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.71-க்கு விற்பனையானது தற்போது, ரூ.105-க்கு விற்கப்படுகிறது. ரூ.70-க்கு விற்பனையான ஒரு கிலோ தானியங்கள் ரூ.225-க்கு விற்கப்படுகிறது” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன், மாநில பேச்சாளார் நாஞ்சில் ஜேசு துரைராஜ், மாவட்ட துணைத் தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago