கடலூர் மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வருவதால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக தொடர் கன மழைபெய்து வருகிறது. நேற்று முன்தினம்இரவு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்தது. நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
கடலூர் பகுதியில் பாதிரிகுப்பம், குண்டு உப்பலவாடி, கூத்தப்பாக்கம் உள்பட பல் வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பேருந்து நிறுத்த சிறிய கட்டிடம் தென் பெண்ணை ஆற்று வெள்ளத்தினால் இடிந்து விழும் நிலையில் இருந்ததை போலீஸார் ஜேசிபி மூலம் அதனை இடித்து ஆற்றில் தள்ளினர்.
மேலும் ஏரி, குளங்களுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பா லான ஏரி, குளங்கள் ஏற்கெனவே நிரம்பியிருக்கும் நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஏரி, குளங்களுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற் றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விவசா யிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே சித்தமல்லி கிராமத்தில் 70 ஆண்டு புளியமரம் வேரோடு சாய்ந்துள்ளது. இதனை அகற்றும் பணி நடந்து வருகிறது. புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் கனமழையால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் விழுந்து சேதம் அடைந்துள்ளன. 7 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 30 குடும்பங்கள் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய மழையளவு: அண்ணாமலைநகரில் 73.4 மிமீ, பரங்கிப்பேட்டையில் 69.6 மிமீ, காட்டுமன்னார்கோவிலில் 67.3 மிமீ, புவனகிரியில் 56.6 மிமீ, சிதம்பரத்தில் 54.3 மிமீ, லால்பேட்டையில் 50 மிமீ, கடலூரில் 46.4 மிமீ, முஷ்ணத்தில் 36.1 மிமீ, விருத்தாசலத்தில் 23 மிமீ, பண்ருட்டியில் 22.2 மிமீ, வேப்பூரில் 19 மிமீ, குறிஞ்சிப்பாடியில் 19 மிமீ மழை பெய்துள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி அடுத்துள்ள பாகூர், கந்தன்பேட், காட்டுக்குப்பம், பரிக் கல்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையினால் ஆயிரக்கணக்கான வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்தது. பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக கிருமாம்பாக்கம் மாரி யம்மன் கோயில் வீதி, பனங்காடு பகுதி உள்ளிட்ட இடங்களில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.இதனால் அந்த வீடு களில் இருப்பவர்கள் அருகிலுள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 37 மி.மீ மழையும், நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை 78 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
30 குடும்பங்கள் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago