கடலூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார் வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட கோண்டூர், வெங்கடா ஜலபதி நகர், இரட்சகர் நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதையும் அதனைபம்புசெட் உதவியுடன் வெளியேற் றும் பணி நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கூடுதலாக பம்புசெட் பயன்படுத்தி துரிதமாக நீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பாதிரி புலியூர் நவநீதம் நகர் குடியிருப்பு, தானம் நகர் பகுதியில் கனமழை யினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகு தியில் உள்ள பொதுமக்களை அருகில் உள்ள முகாமில் பாது காப்பாக தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டஅனைத்து அடிப்படை தேவை களை செய்து தருமாறு அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.
தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை பம்புசெட்டுகள் கொண்டு உடனுக்குடன் வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கனமழையினால் அதிகம் பாதிக்கப்படகூடிய பகுதியில் உள்ள பொதுமக்களை அருகில் உள்ள முகாம்களில் தங்கவைத்து அவர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவி யரசு, மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன், வட்டாட்சியர் பலராமன், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் அசோக்பாபு,சக்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago