ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் : சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

By செய்திப்பிரிவு

பண்ருட்டி அருகே உள்ள அரசடிக்குப்பம் ஊராட்சி புதூர் கிராமத் தில் கடந்த ஜனவரி மாதம் 26 ம்தேதி நடைபெற்ற கன்னி விடும்திருவிழாவிற்கு சென்ற பாலமுரு கன் மகள் புவனேஸ்வரி, லட்சபூபதி மகள்கள் நந்தினி, வினோதினி ஆகிய மூவரும் சித்தேரியில் மூழ்கிஉயிரிழந்தனர். இதில் இருவர் கல்லூரியிலும், ஒருவர் பனிரெண் டாம் வகுப்பும் படித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சட்ட மன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தமூவருக்கும் அஞ்சலி செலுத்தி னார். அந்த குடும்பங்களுக்கு அரசு வழங்கும் முதல்வர் நிவாரண நிதி பெற்று தருவதாக தெரிவித்தார்.அதனை தொடர்ந்து அவர் இது குறித்த தகவலை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு நிவாரணமாக தலா ரூ. ஒரு லட்சத்தை வழங்க அரசு உத்தரவிட்டது. நேற்று சட்ட மன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் ரூ ஒரு லட்சத்துக்கான காசோலைகளை அக்குடும்பத்தாரிடம் வழங்கினார். பண்ருட்டி வட்டாட்சியர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை வீரபாண்டியன், வருவாய் ஆய்வாளர் பிரியலதா, கிராம நிர்வாக அலுவலர் பூவராகவன், திமுக ஒன்றியபொருளாளர் ஐயப்பன், பொறியாளரணி சக்திவேல், கிளைச்செய லாளர் முருகவேல், முருகையன், நடேசன் வழக்கறிஞர் சிலம்பரசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்