சிறுபான்மையின மாணவ, மாணவிகள் - கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவி கள் வருவாய் மற்றும் தகுதி அடிப்படை யிலான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசின் சிறுபான்மையினருக் கான பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் மற்றும்தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் வரும் 30-ம் தேதிக்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (என்எஸ்பி) உடனடியாக புதுப்பித்து, அதற்கான விண்ணப்பத்தினை தொடர்புடைய கல்வி நிலையங் களில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், புதுப்பித்தல் விண்ணப் பங்களுக்கு வருமானச் சான்று சமர்ப்பிக்க அவசியமில்லை. ஆதார் விவரங்களில் பெயர்மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக் காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத் திலுள்ள அனைத்து கல்வி நிலையங் களும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு, இணையத்தில் வருகிற 30-ம் தேதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண். 11) தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE