வீரபாண்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
சேலம் ஓமலூர் அடுத்த காமலாபுரம் கிழக்கு காட்டு வளவைச் சேர்ந்தவர் விவசாயி சந்தோசம் (42). இவர் தனது மனைவி லலிதாவுடன் (40) இருசக்கர வாகனத்தில் ஆட்டையாம்பட்டிக்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றார். வீரபாண்டி அருகே அரியானூர்- ஆட்டையாம்பட்டி சாலையில் இவர்கள் சென்றபோது, எதிரே வீரபாண்டி ராஜவீதியைச் சேர்ந்த தர் (25) என்பவர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே சந்தோசம் உயிரிழந்தார். படுகாயமடைந்த லலிதா சீரகா பாடியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தர் உயிரிழந்தார். இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தநிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago