தூத்துக்குடி நகரின் மாசுக்கு ஸ்டெர்லைட் காரணமில்லை : ஆதரவு கூட்டமைப்பினர் தகவல்

By செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நான்சி, வழக்கறிஞர் ஜெயம் பெருமாள், சாமிநத்தம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் முருகன், துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குநர் தனலட்சுமி, தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத் தலைவர் தியாகராஜன், துணைத் தலைவர் பரமசிவன் உள்ளிட்டோர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தூத்துக்குடியில் ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். அதில், காற்றின் மாசு அளவு வெளியி டப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரின் மாசு குறித்து சிப்காட் உள்ளிட்ட மூன்று இடங் களில் வைக்கப்பட்டுள்ள அளவீட்டு கருவிகளின் மூலம் ஆய்வுகள் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

தூத்துக்குடி நகரம் எப்போதும் ஒரே மாதிரியான மாசுபட்ட சூழ்நிலையிலேயே உள்ளது. அதாவது, ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது எந்த அளவு மாசு இருந்ததோ, அதே அளவு மாசு தான் தொடர்ந்து இருக்கிறது. தூத்துக்குடி நகரம் மாசுபடுவதற்கு இங்கே இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள தூசுகளும் காரணம் என, அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. தூத்துக்குடி நகரத்தின் மாசுக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கும் தொடர்பு இல்லை என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்