தேனி மாவட்டம் கடமலைக் குண்டுவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (28). ஆண்டிபட்டியை சேர்ந்தவர் சரவணன் (27). இருவரும், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மகேந்திரன் என்பவரது இறைச்சிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். நேற்றுமுன் தினம் இரவு சொந்த ஊரிலிருந்து ஒரே இருசக்கர வாகனத்தில் இருவரும் வந்தனர். கணக்கம்பாளையத்தில் உள்ள மகேந்திரன், தனது வீட்டில் இருவரையும் தங்கவைத்தார்.
நேற்று காலை இருசக்கர வாகனத்தில், ரமேஷ்குமாரும், சரவணனும் இறைச்சிக் கடைக்கு வேலைக்கு சென்றனர். அப்போது பெருமாநல்லூர் மீனாட்சி நகர் அருகே சென்றபோது எதிரே பெருமாநல்லூரில் இருந்து பனியன் தொழிலாளர்களை ஏற்றிவந்த சிற்றுந்து மோதியது. இதில், ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சரவணன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு விபத்து
வெள்ளகோவிலை அடுத்த உத்தமபாளையம் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சிங்கார வேலன் (27). இவர், தேங்காய் களத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காங்கயம் நகர் பழையகோட்டை சாலை வரதம்பாளையம் காலனி அருகே நிலை தடுமாறி, மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகே இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தது, தெரியவந்தது. இதுகுறித்து காங்கயம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago