நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களை தங்கவைக்கும் வகையில் - நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

By செய்திப்பிரிவு

நீலகிரியில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைஅலுவலர்களுடனான ஆலோசனைகூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் தலைமை வகித்து பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குபருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, தோட்டக் கலைத் துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ் சாலைத் துறை, பொதுப் பணித் துறை, மருத்துவம், சுகாதாரப் பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றும் வகையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களுக்கு உட்பட்டஇடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிப்புஏற்படும் போது உடனடியாக அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகள், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைக்கும் வகையில்நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். நீலகிரியில் சாலையில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் வகையில், தேவையான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆட்சியர் ஆய்வு

உதகை புனித தெரேசன்னை உயர்நிலைப்பள்ளி, ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் நேற்று பார்வையிட்டார். கேத்தி மந்தாடா, மிட்டாய் போர்டு பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மழைக்கால முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தஆட்சியர், அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாம், குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவுரு அறை, இருப்பு கோப்புகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்