விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிருக்கு நவ.30-க்குள் காப்பீடு செய்யு மாறு வேளாண் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம் 29 ஆயிரம் ஹெக்டே ரிலும், கம்பு 550 ஹெக்டேரிலும், துவரை 420 ஹெக்டேரிலும் பருத்தி 15,740 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மழையால் மக்காச்சோளம், கம்பு, ராகி, துவரை மற்றும் பருத்தி பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.
பயிர் காப்பீடுக்கு கட்டணம் (ஏக்கருக்கு) மக்காச்சோளம்- ரூ.411, கம்பு- ரூ.139, ராகி- ரூ.155, துவரை- ரூ.199, பருத்தி-ரூ.452. பயிர் காப்பீடு பதிவு செய்ய நவ.30 கடைசி நாளாகும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago