கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கறவை பசுக்கள் வளர்ப்போருக்கு கிஸான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய அளவிலான கிஸான் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டத்தின்கீழ் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கிகள் மூலம் கிஸான்கிரெடிட் கார்டு வழங்கப் படவுள்ளது.
விவசாயிகள் தங்களுடைய அடையாள சான்றாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றும், முகவரி அடையாளச்சான்றுக்காக சமீபத்திய தொலைபேசி ரசீது, மின்கட்டண ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் அரசால் வழங்கப்பட்ட சான்றுகள், இவற்றில் ஏதேனும் ஒன்றும், பாஸ்போர்ட் அளவு உள்ள புகைப்படங்கள் 2, சிட்டா அல்லது அடங்கலின் நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஒரு கறவை பசுவுக்கு ரூ.14 ஆயிரம் வீதம் செயல் மூலதன கடன் மட்டும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வங்கிகளால் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தொடர்புடைய வங்கிகள் மூலம் கிஸான் கிரெடிட் கார்டு கடனாக வழங்கப்படும். சான்றுகளுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விவசாயிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் அளித்து பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago