திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இதுவரை 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 780 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியோர், கடும் ஊனம், தசைச் சிதைவு நோய், தொழுநோய், முதுகுத் தண்டுவடம் நோய், பார்க்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 4,750 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
சிறு, குறு நடுத்தர மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு சுயதொழில் செய்ய வங்கிக்கடன் மானியமாக ரூ.3,83,334 வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகள் 104 பேருக்கு ஸ்மார்ட் செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. 56 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோன்று நலத்திட்ட உதவிகளை அரசிடமிருந்து கேட்டுப் பெறுவதற்கு முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் உரிய அடையாள அட்டையைப் பெற்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago