இளைஞர்கள் நேர்காணலில் - தன்னம்பிக்கையுடன் பங்கேற்க வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுரை

By செய்திப்பிரிவு

தனியார் நிறுவனங்கள் நடத்தும் நேர்காணலில் இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி பேசும்போது, ‘‘இந்த முகாமில் 77 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. முகாமில் பங்கேற்ற 4,028 பேரில் 1,465 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு நிறுவனத்துக்கு நேர்காணலுக்கு செல்லும் போது 3 முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். நேர்காணலுக்கு செல்ப வர்களுக்கு தகவல் தொடர்பு திறன் முக்கியம்.

நேர்காணல் நடத்துபவருக்கு தெரிந்த மொழியில் தொடர்பு கொள்ள வேண்டும். நிறுவனங் களும் நேர்காணலுக்கு வந்த நபர்களிடம் தொடர்பு திறன் எவ்வாறு உள்ளது என கூர்ந்து ஆய்வு செய்கின்றனர். குறிப்பிட்ட பணியிடத்துக்கு கல்வித்தகுதி உடையவர்களாகவும் அதற்கு தகுந்தவாறும் இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் நேர்காணலில் பங்கேற்க வேண் டும். அந்த துறைகளில் முன் அனுபவம் மற்றும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நிறுவனங்களில் தேர்வான பிறகு அந்த துறைக்கு ஏற்ப தன்னுடைய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்கள் குறைவாக ஊதியம் கொடுத்தாலும் அந்த பணியில் சேர்ந்து கொண்டு பணியில் திறமையுடன் செயல்பட்டால் அந்த நிறுவனமே உழைப்பிற்கேற்ற ஊதியத்தை வழங்கும். படித்த இளைஞர்கள் முகாமில் பங்கேற்று தங்களின் தகுதிக்கேற்ற பணிகளில் சேர்ந்து வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்