570 பயனாளிகளுக்கு ரூ.6.47 கோடியில் நலத்திட்ட உதவிகள் : பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

By செய்திப்பிரிவு

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 570 பயனாளிகளுக்கு ரூ.6.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். கூடுதல் ஆட்சியர் பிரதாப் வரவேற்றார்.

இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 570 பயனாளிகளுக்கு ரூ.6.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது, ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்கு திட்டத்தின்படி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தி, தி.மலை மாவட்டம் முழுவதும் 1,121 பண்ணை குட்டைகளை 30 நாட்களில் அமைத்து உலக சாதனை படைக்கப்பட்டது.

நிலத்தடி நீரை சேமிப்பதில் முன்னோடியாக நிகழ்த்திய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டிபேசும்போது, ‘‘கீழ்பென்னாத்தூரில் தாலுகா மருத்துவமனை, விளை யாட்டு திடல் அமைத்துக்கொடுக்க வேண்டும். துரிஞ்சலாற்றை தூர்வார வேண்டும்’’ என்றார்.

இதில், திருவண்ணாமலை எம்.பி., அண்ணாதுரை, எம்எல்ஏ.க்கள் சரவணன் (கலசப்பாக்கம்), கிரி (செங்கம்), தலைமை செயற்குழு உறுப்பினர் தரன், செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் கலைவாணி, துணைத்தலைவர் ரமணன், துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, துணைத் தலைவர் உஷாராணி சதாசிவம், ஆணையாளர்கள் சம்பத், விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, தலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், துணைத் தலைவர் சரவணன், நீலம்தாங்கள் ஊராட்சிமன்ற தலைவர் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் அனுராதா சுகுமார், சோ.நம்மியந்தல் ஊராட்சிமன்ற தலைவர் சத்யா கார்த்திகேயன், துணைத்தலைவர் தேவேந்திரன், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் வாசுகி ஆறுமுகம், நடுபட்டு ஊராட்சிமன்ற தலைவர் வேதநாயகி, துணைத்தலைவர் பச்சையம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்