குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து திருப்பூரில் விவசாயிகள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் உள்ள பெரிய கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று சிறிய அரங்கில் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்டநிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை அங்குதிரண்ட விவசாயிகள், சிறிய அரங்கில் இடவசதி போதவில்லைஎனக்கூறி ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணித்தனர். முன்னதாக அந்த அறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திரகுறைதீர் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இக்கூட்டத்தை ரத்து செய்வதாகஅறிவித்த அரசு அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்பதற்காக காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேரை திருப்பி அனுப்பினர். வெகுநேரமாகியும் குறைதீர் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.வினீத் வராததால், அதிருப்தியடைந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து விவசாயிகளிடம் வீரபாண்டி போலீஸாரும், வேளாண் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வரும் 30-ம் தேதிக்குள் சங்கத் தலைவர்களை அழைத்து, கூட்டம் நடத்த ஆட்சியரிடம் அனுமதிபெற்றுத்தரப்படும் என அதிகாரிகள்உறுதி அளித்ததால், விவசாயிகள்கலைந்து சென்றனர்.மாதாந்திர குறைதீர் கூட்டத்தை சிறிய அரங்குக்கு மாற்றியதை கண்டித்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்