ரயிலில் சாகசம் செய்த மாணவி, மாணவருக்கு - திருவள்ளூர் எஸ்பி அறிவுரை :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ளகவரப்பேட்டை ரயில் நிலையத்தில், சீருடை அணிந்த மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் ஓடும்மின்சார ரயிலில் தாவி ஏறி, ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடியும், கால்களை நடைமேடையில் உரசியபடியும் சாகசபயணம் மேற்கொள்ளும் வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதற்கிடையே மின்சார ரயிலில் சாகச பயணம் செய்தவர்கள், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் பிளஸ் 2 மாணவி, பிளஸ் 1 மாணவர் என்பது தெரியவந்தது. அம்மாணவி, மாணவரைபெற்றோருடன் நேற்று திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்துக்கு வரவழைத்த எஸ்பி வருண்குமார், இருவரையும் நல்வழிப்படுத்தும் விதமாக, ரயில்களில் ஏற்கெனவேகவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் பயணம் செய்து, படுகாயமடைந்த, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை காண்பித்து, உரிய அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, மாணவி, மாணவரின் பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஓடும் பஸ், ரயில்களில் அபாயகரமான பயணம் செய்வது தெரியவந்தால், அது குறித்த தகவல்களை திருவள்ளூர் எஸ்பியின் பிரத்யேக மொபைல் போன் எண்ணான 6379904848 -க்குதெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்