வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமை வகித்தார். இதில் வாழை விவசாயிகள் பேசும்போது, புயலால் ஏற்பட்ட இயற்கை சேதத்துக்கு நிவாரணம் வழங்க மறுப்பதாகவும், புயல் மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புக்குத்தான் நிவாரணம் வழங்குவது என்பது சரியில்லை என்று தெரிவித்தனர்.
அதற்கு, வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.
ஆட்சியர் அனிஷ் சேகர் பேசுகையில், ‘‘மாவட்டத்தின் 75 சதவீத கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago