விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதை ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு செய்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் கரையோரப்பகு தியான பள்ளி மற்றும் வீடுகளில் மண் அரிப்பு ஏற்படாத வகையில் பெரிய கருங்கற்கள் கொண்டு தடுப்பு வேலி அமைத்திட கனிம வளத் துறை துறையினருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து தளவானூர் கிராம மக்கள் மழைக்கால நிவாரணம், வீட்டுமனைப்பட்டா வேண்டுமென கோரிக்கை மனுவை அளித்தனர். “இன்று (நவ. 27) முதல் நிவாரணம் வழங்கப்படும். 15 நாட்களுக்குப் பிறகு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்” என்று ஆட்சியர் தெரிவித்தார். பின்னர்தளவானூர் அரசு உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர் பள்ளிவளாகங்களில் மழைநீர் தேங்கி யுள்ளதை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
15 நாட்களுக்குப் பிறகு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago