கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்லூரியில் மாணவர்களுக்கான ஆளுமைத்திறன் பயிற்சி :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் மாணவர்களுக்கான ஆளுமைத்திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தொடர் வகுப்புக்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள காமராஜர் அரங்கில் நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலரும் கல்லூரி முதல்வருமான முனைவர் கு.மோகனசுந்தர் அனைவரையும் வரவேற் றார்.

ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.க.மகு டமுடி தலைமை தாங்கினார். சென்னை சில்வர் லைன் மேனேஜ் மென்ட் இயக்குநர் சித்தேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், "மாணவர் கள் வாழ்விலும் தொழில் துறையிலும் கல்வியிலும் முன்னேற வேண்டுமானால் தம்முடைய ஆளுமைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவரின் ஆளுமையே அவரின் திறமையை வெளிக்கொணர்ந்து நிற்கிறது . மாணவர்கள் நேரம் தவறாமை, உடை சீர்திருத்தம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கி ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

அதைத்தொடர்ந்து பிற்பகல் நடைபெற்ற போட்டித் தேர்வுகளுக்கான தொடர் வகுப்புதொடக்க விழாவை சென்னை போட் டித் தேர்வுகளுக்கான அகாடமி பயிற்றுநர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசுகையில், "ஆர்.கே.எஸ்.கல்விநிறுவனம் தொடர்ந்து 4 ஆண்டு களாக தமிழகத்தின் சிறந்த போட்டித் தேர்வுகளுக்கான பயிற் றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பது சிறப்புக்குரியது. மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக ளுக்கான எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன.

மாணவர்கள் திட்டமிட்டு படித்தால் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.

மேலும் போட்டித் தேர்வுக ளுக்கான வேலைகள், அதற்கானபாடத்திட்டங்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். கரோனா காலத்திற்கு பிறகு நடைபெற்ற இந்த போட்டித் தேர்வுகளுக்கான விழாவில் மாணவர்கள் ஆர்வமு டன் கேட்டு பயனடைந்தனர்.

துறைத்தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் உடனிருந்தனர். துணை முதல்வர் முனைவர்.பெ.ஜான்விக்டா நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவர் அருள், வணிக மேம்பாட்டுத் துறைத் தலைவர் சங்கரன் உள்ளிட்ட துறைத்தலைவர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்