ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று : படகுகளை பாதுகாப்பாக நிறுத்த அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரு கிறது. வங்கக் கடலில் சூறைக்காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு, படகுகளை பாதுகாப்பாக நிறுத்த மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வரு கிறது.

தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய் தது. இதனால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் வருகை குறைவாகக் காணப்பட்டது. மேலும் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைந்தது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதியில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத் தில் சூறைக்காற்று மற்றும் கன மழைக்கு வாய்ப்புள்ளதால் மீன வர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை யினர் அறிவித்துள்ளனர்.

மேலும் விசைப்படகு, நாட்டுப் படகுகளை பாதுகாப்பாக இடை வெளிவிட்டு நங்கூரம் இடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்