பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கே.ஆர்.தங்கராஜ் (ஐஎன்டியுசி) தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், பி.சண்முகம் (ஹெச்.எம்.எஸ்), சே.கோபால் (எல்பிஎப்), எஸ்.எஸ்.காளியப்பன் (எம்.எல்.எப்), ஏ.கோவிந்தராஜ் (எல்டியூசி), சி.எம்.துளசிமணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி உள்ளதை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி, நகரப் பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago