நாகை துறைமுகம் அருகில் உள்ள ஊசி மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மழைநீர் புகுந்து குளம்போல தேங்கியுள்ளதை நேற்று பார்வையிடும் ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன். (அடுத்த படம்) தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் மழையால் இடிந்து விழுந்த பழமையான அன்னதான சத்திரத்தின் சுவர். 
Regional02

நாகையில் 19 செ.மீ மழை பதிவு: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது : தஞ்சாவூர், திருவாரூரில் மீண்டும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

செய்திப்பிரிவு

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நாகையில் 19 செமீ மழை பதிவாகியது. இதனால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த தால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாயினர்.

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்றும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (சென்டி மீட்டரில்): நாகப்பட்டினம் 19, திருப்பூண்டி 7.56, திருக்குவளை 6.41, கோடியக்கரை 4.74, தலை ஞாயிறு 4.34, வேதாரண்யம் 3.06.

கனமழை காரணமாக நாகப் பட்டினத்தில் புதிய நம்பியார் நகர், ஆரியநாட்டுத் தெரு, 2-வது கடற்கரை சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. சில இடங்களில் வீடு களுக்குள்ளும் மழைநீர் புகுந் ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாவட் டத்தில் 14 கூரை வீடுகள், 3 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 8 கால்நடைகள் இறந்துள்ளன.

வெள்ளம் சூழ்ந்துள்ள ஊசி மாதா கோயில், வ.உ.சி தெரு, மருந்து கொத்தள தெரு, சாமந்தான்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளை ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். மேலும், தெருக்களிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்த மழைநீரை உடனடியாக வெளியேற்ற அறிவுறுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளி டம் உட்பட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர்ந்து பெய்த மழையால், தஞ்சாவூரை அடுத்த வெண்ணாற்றங்கரையில் உள்ள 165 ஆண்டுகள் பழமையான சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட அன்னதான சத்திரத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், அங்கு கட்டப்பட்டிருந்த வேதவள்ளி என்பவருக்கு சொந்தமான இரண்டு கன்று குட்டிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே நீலத்தநல்லூரில் குழந்தைசாமி மனைவி சரோஜா(60), மகன் குமார்(40) ஆகியோர் வசித்து வந்த குடிசை வீடு இடிந்து விழுந் ததில் தாய், மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் சக்கரசாமந்தம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப் பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

சித்திரைக்குடி அருகே கோனா வாரி வாய்க்காலில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், மழைநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.

கும்பகோணம் அருகே சாக்கோட்டை- நாச்சியார்கோவில் சாலையில் ஒத்தகுளம் பகுதியில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான பெரிய புளியமரம் தொடர் மழையின் காரணமாக நேற்று சாலையின் குறுக்கே விழுந்தது. தகவலறிந்த கும்ப கோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உத்தரவிட்டதன் பேரில், நெடுஞ்சாலை, மின்வாரி யம், தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருவாரூரில் புழுந்தான் குளம் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் அருகே கானூர், திருத்துறைப்பூண்டி பகுதியில் சிங்களாந்தி, விளக்குடி, ராயநல்லூர், முத்துப்பேட்டை, கோட்டூர், நன்னிலம், பனங்குடி உள்ளிட்ட இடங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவி லான சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீ ரில் மூழ்கி யுள்ளன.

SCROLL FOR NEXT